ஒரு பெரிய பேரரசை வழிநடத்துங்கள், இராணுவத்திற்குக் கட்டளையிடுங்கள், வீரர்களுடன் போர்க்களத்திற்குத் தலைமை தாங்கி அழைத்துச் சென்று வெற்றி பெறுங்கள். வலிமையான நாடுகளுக்குப் போட்டியாக இருக்கும் பொருளாதாரத்தை உருவாக்குங்கள், இராஜதந்திர விளையாட்டுகளில் ஈடுபடுங்கள், சர்வதேச அரங்கில் செயலூக்கமான வீரராக மாறுங்கள். உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நாகரிகமாகப் போராடுங்கள்!
காலனியாக்கக் காலமே ஒரு நாட்டை, ராணுவத்தை மற்றும் அரசியலை நிர்வகிப்பதற்கான சிறந்த உத்தியாகும். உங்கள் போர்க்களம் 1600ஆம் ஆண்டில் நடைபெறும், ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் மிக வலிமையான சாம்ராஜ்ஜியங்களை எதிர்கொள்வீர்கள்.
40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆச்சரியமான போர்களில் ஈடுபட்டு, உங்களின் சொந்த புதிய டைம்லைனை உருவாக்குங்கள். புனித ரோமானியப் பேரரசு முதல் ஜப்பான் வரை, பெரிய சீன மின் பேரரசு முதல் இங்கிலாந்து வரை, ஒவ்வொரு நாகரிகமும் உங்கள் எதிரியாக இருக்கும், அவரவருக்கென்று சொந்தமான லட்சியங்கள் மற்றும் உறுதியான நோக்கம் கொண்டிருப்பர். உங்கள் இராணுவத்தை உருவாக்கி மற்ற நாடுகளுக்கு எதிராக உங்கள் அதிர்ஷ்டத்தைச் சோதித்து, போர்களில் உங்கள் வரலாற்று வலிமையை வெளிப்படுத்தி, கூட்டணிகளை உருவாக்கி, முழு உலகையும் வெல்வதற்கான உடன்படிக்கைகளில் கையெழுத்திடுங்கள்.
பசிபிக் பெருங்கடல் முதல் அட்லாண்டிக் வரை உங்கள் பேரரசை உருவாக்குங்கள், இப்போதே வரலாற்றின் வெற்றிப் பயணத்தைத் தொடங்குங்கள்!
கேமில் நீங்கள் இவற்றை எதிர்பார்க்கலாம்:
▪️ நிகழ்நேர உத்தி, ஆஃப்லைனிலும் செயல்படும்
▪️ முடிவில்லாத சாத்தியக்கூறுகள் மற்றும் வளங்களுடன் புதிய நிலங்களைக் காலனிப்படுத்தலாம்
▪️ வலிமையான இராணுவங்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுடன் எதிரிகளுக்குச் சவால் விடலாம்
▪️ புதிய பிராந்தியங்களை வெற்றி கொள்ளலாம், தோற்கடிக்கப்பட்ட எதிரிகளைக் கொள்ளையடிக்கலாம்
▪️ வரலாற்று நாடுகள் மற்றும் பேரரசுகள், யுகத்தில் ஆழமாக மூழ்கிப்போகலாம்
▪️ பொருளாதார வளர்ச்சிக்காக மற்ற நாடுகளுடன் வணிகம் செய்யலாம்
▪️ உங்கள் இராணுவம், இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் காலனித்துவத்தை மேம்படுத்த ஏராளமான ஆராய்ச்சிகள் செய்யலாம்
▪️ தனித்துவமான போனஸ்களுடன் தந்திரமான மற்றும் சவாலான பணிகள் மேற்கொள்ளலாம்
▪️ கடற்கொள்ளையர்கள், கொள்ளைக்காரர்கள், நாசவேலையாளர்கள், உளவாளிகள், தொற்றுநோய்கள், பெருந்தொற்று, கிளர்ச்சிகள் போன்று பல்வேறு சவால்களை எதிர்கொள்ளலாம்
வரலாற்றில் மிகப்பெரிய நாகரிகத்தை உருவாக்குங்கள், உங்கள் எதிரிகளைத் தோற்கடிக்க போர் மூலோபாயங்கள் மற்றும் தந்திரங்களை வளர்த்தெடுங்கள். உலகம் முழுவதிலுமுள்ள மில்லியன்கணக்கான வீரர்களுடன் சேர்ந்து காலனித்துவ யுகத்தில் உலகளாவிய ஆதிக்கத்தை அடையுங்கள்!
இப்போதே கேமைப் பதிவிறக்கி, உங்கள் பெரிய நாகரிகத்தை உருவாக்கத் தொடங்குங்கள்!
இந்த கேம் பின்வரும் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: ஆங்கிலம், ஸ்பானிஷ், உக்ரேனியன், போர்த்துகீஸ், பிரெஞ்ச், சீனம், ரஷ்யன், துருக்கிஷ், போலிஷ், ஜெர்மன், அரபிக், இத்தாலியன், ஜப்பானீஸ், இந்தோனேஷியன், கொரியன், வியட்நாமீஸ், தாய்.
*** Benefits of premium version: ***
1. You’ll be able to play as any available country
2. No ads
3. +100% to day play speed button available
புதுப்பிக்கப்பட்டது:
7 அக்., 2025