பழங்கால உத்தி உங்களை, வரலாற்றிலேயே ரத்தம் தோய்ந்த நூற்றாண்டான 20ஆம் நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்லும். அதிகாரத்துக்கும் வலிமைக்கும் போராடிய நிஜ நாடுகளுக்குத் தலைமை வகிக்கலாம். உங்கள் நுண்ணறிவு மற்றும் யுக்திமிகுந்த திறமைகளை வெளிப்படுத்தி, ரணகளமான யுத்தங்களில் எதிரிகளுடன் போரிடுங்கள். பொருளாதாரத்தில் அதிசயத்தை உருவாக்கி உங்கள் நாட்டைச் செழிப்புக்கு வழிநடத்துங்கள். பேரைக் கேட்டாலே உலகமே அதிரக்கூடிய வீழ்த்த முடியாத ரானுவத்தைக் கட்டமையுங்கள். தலைமைதாங்கும் உலகில், ஒருவன்தான் தலைமை ஏற்க முடியும்!
சிறந்த பேரரசராக, புத்திசாலியான அரசராக அல்லது அன்பான அதிபராக உருவாகுங்கள். போர்கள், பேரழிவுகள், வேவு பார்த்தல் மற்றும் ஒப்பந்தங்கள் - நீங்கள் எதிர்பாராதவற்றுள் சில மட்டுமே இவை. உங்கள் சிம்மாசனம் காத்திருக்கிறது!
20ஆம் நூற்றாண்டின் ஒரு புதிய வரலாற்றை எழுதுங்கள், அச்சமில்லாத சர்வாதிகாரியாகவோ, சிறந்த சமாதான சிற்பியாகவோ.
கேமின் அம்சங்கள்:
✪ சிறந்த சாம்ராஜ்யங்களும் தேசங்களும் கொண்ட 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலச் சூழல்
✪ காலனியாக்கம்: மேப்பில் உள்ள காலி இடங்களை நிரப்பி, புதிய நிலங்களைக் கண்டறியுங்கள்
✪ மற்ற நாடுகளுக்கு எதிராகப் போர்களை அறிவித்துத் தேவைக்கேற்ப ராணுவ நடவடிக்கைகளில் பங்குபெறுங்கள்
✪ வேகமான அட்டகாசமான போர்கள்: எதிரியின் கோட்டையைத் தகர்த்திடுங்கள் அல்லது வெள்ளைக் கொடியை ஏற்றுங்கள்
✪ லீக் ஆஃப் நேஷன்ஸ்: தீர்மானங்களை முன்மொழிந்து மற்றவர்களுக்கு வாக்களியுங்கள், வாக்குகளுக்கு லஞ்சம் கொடுங்கள்
✪ புரிந்துகொள்ளக்கூடிய நுட்பங்கள்: பொருளாதாரம், ராணுவம் மற்றும் அரசியல்
✪ ஆட்சி செய்ய 60க்கும் மேற்பட்ட நாடுகள்
✪ தரைவழி, கடல்வழி மற்றும் ஆகாயமார்க்கமாக அபாரமான போர்கள்
✪ நவீன கால ராணுவம்: டாங்கிகள், பாம் போடும் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், பீரங்கி மற்றும் காலாற்படை
✪ உங்கள் மதம் மற்றும் கோட்பாட்டைத் தேர்வுசெய்யுங்கள்
✪ வர்த்தகம் செய்து வரி வசூலியுங்கள்
✪ எதிர்காலத்துக்கான புதிய ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றி அறிக
பல்வேறு உத்திகள் மற்றும் செயல்பாடுகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. கௌரவம் மற்றும் ஆதிக்கத்துக்கான போராட்டம்! உங்கள் தேசத்தின் உண்மையான தலைவராகுங்கள்!
கேம் பின்வரும் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுகிறது: ஆங்கிலம், ஸ்பானிஷ், உக்ரேனியன், போர்சுகீஸ், ஃபிரெஞ்ச், சீனம், ரஷ்யன், துருக்கி, போலிஷ், ஜெர்மன், அரபிக், இத்தாலியன், ஜப்பானியம், இந்தோனேசியன், கொரியன், வியட்நாமீஸ், தாய்.
புதுப்பிக்கப்பட்டது:
3 அக்., 2025
ஒருவர் மட்டும் விளையாடும் கேம்கள்